shadow

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரிக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்

hilari and obamaதற்போதைய நிலையில் மெஜாரிட்டி புள்ளிகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்த நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் இரு தரப்பினர்களும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவுள்ளார். இவருடைய அமைச்சரவையில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்ய முடிவு செய்தது குறித்து நேற்று வெள்ளை மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வடக்கு கரோலினாவில் அதிபர் ஒபாமா அதிக ஓட்டுகள் பெற்று இருந்தார். எனவே அங்கு நடைபெறும் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply