shadow

அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம். ஹிலாரியை நெருங்கிவிட்ட டிரம்ப்

8அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதுவரை வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டன் ஊடகம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் ஹிலாரியை டொனால்ட் டிரம்ப் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த “தி எகானமிஸ்ட்’ வார இதழும் யூ-கவ் ஆன்லைன் ஊடகமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் ஹிலாரி கிளிண்டனுக்கு 47 சதவீத ஆதரவும், டொனால்ட் டிரம்ப்புக்கு 44 சதவீத வாக்காளர்கள் ஆதரவும் இருப்பதாகவும், இன்னும் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் இருப்பதால் ஹிலாரியை டிரம்ப் தோற்கடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

172 ஆண்டுப் பாரம்பரியம் மிக்க “தி எகானமிஸ்ட்’ வாரப் பத்திரிகையின் கருத்துக் கணிப்பின் முடிவு அனைவரையும் ஆச்சரியம் அளித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் இந்த இரண்டு மாதங்களில் அதிரடி பிரச்சாரம் செய்தால் அடுத்து அமெரிக்க அதிபர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

Leave a Reply