டிரம்ப் தன்னுடன் உறவு வைத்ததாக கூறிய ஆபாச நடிகை அதிரடி கைது

அமெரிக்க அதிபர் தன்னுடன் உறவு வைத்ததாக குற்றஞ்சாட்டிய ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் ஆபாசம் இல்லாத வகையில் தன்னை தொடுவதற்கு அனுமதி அளித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வயது வந்தவர்களுக்கான கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உற்சாகம் ஏற்படுத்த தன்னை ஒரு ரசிகர் ஆபாசம் இல்லாத வகையில் தொடுவதற்கு ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அனுமதி அளித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வக்கீல் மைக்கேல் அவினாட்டி கூறியபோது, “இது திட்டமிட்ட நாடகம். அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இது பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது. நாங்கள் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார். மேலும் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸை ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *