shadow

பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழு விசாரணை

தகவல்கள் திருட்டு குறித்து உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான பேஸ்புக்’ நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இரண்டு நாட்கள் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை முன்னிட்டு இன்று மார்க் ஜூக்கர்பெர்க் செனட் பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணைக்கு பின்னரே ஃபேஸ்புக் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது

இதற்கிடையே அமெரிக்காவில் கடுமையான தகவல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்க அரசும் பரிசீலனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

Leave a Reply