shadow

அமெரிக்காவில் அதிபயங்கர ஏவுகணை சோதனை: வட கொரியாவுடன் போர் வெடிக்கும் அபாயம்!

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாட்டு ராணுவங்கள் இணைந்து வட கொரியாவுக்கு எதிராக போர் தொடுக்க ஆயத்தமாவதால் கொரிய தீபகற்பத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆணு ஆயுதங்கள் தாங்கிய நீர்முழ்கி கப்பல் மிசிகான் செவ்வாய்க்கிழமை தென் கொரிய நாட்டின் கடற்கரைக்குக்கு வந்தது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது. வட கொரியா வழக்கமாக ஏவுகணை சோதனை நடத்தும் அந்நாட்டின் ராணுவ தினத்தன்று அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலின் வரவு கொரிய தீபகற்பத்தில் அபாயரமான சூழலை உண்டாக்கியது.

இதனிடையே, அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்து வட கொரியா மீது போர் தொடுக்க ஆயத்தம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சூழலில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று ஆயுதம் தாங்கிய பயங்கர ஏவுகணை சோதனையை அந்நாட்டு ராணுவம் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை, மணிக்கு 14,500 கி.மீ. வேகத்தில் 5,500 கி.மீ. தொலைவுக்குச் சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.

இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் இணைந்தே நடத்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதே நேரத்தில் வட கொரியாவும் அடுத்த ஏவுகணை சோதனைக்கான வேலைகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளதை உறுதிசெய்யும் அமெரிக்க செயற்கைக் கோள் காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்துடன், நேற்று கொரிய தீபகற்பத்திற்கு வந்த நீர்மூழ்கிக்கப்பலால் அமெரிக்கா வட கொரியாவின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது.

இத்தகு காரணங்களால், கொரிய தீபகற்பகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவம் இணைந்து வட கொரியா மீது போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி போருக்கு தயாராக இருப்பதால் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்று கருதப்படுகிறது

Leave a Reply