shadow

பாதுகாப்பு அமைச்சரே பொறுப்பில்லாமல் பேசுவதா? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டனம்

usஉரி தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சர்ஜிக்கல் அட்டாக் செய்த இந்தியாவை அணுகுண்டு மூலம் அழிப்போம் என பாகிஸ்தான் மிரட்டியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசை அமெரிக்கா நேரடியாக தொடர்புகொண்டு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது வருத்தத்துக்குரியது. இது, பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்தும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் இதுகுறித்து கூறியபோது, “உரி தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த பதற்றமான சூழலைத் தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகள் இடையேயான சூழலை அமெரிக்கா தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்நிலையில், உரி தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதில் அமெரிக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி சீர்குலைந்து வருவது கவலையளிக்கிறது என்று கூறினார்.

Leave a Reply