shadow

6கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜனதா உள்பட 6 வெளிநாட்டு கட்சிகளையும், உலகில் உள்ள 193 நாடுகளின் அரசாங்கங்களையும் அமெரிக்க உளவு நிறுவனமான NSA வேவு பார்க்க அந்நாட்டு நீதிமன்றம் உரிய அனுமதி அளித்துள்ளதாக தற்போது திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி உளவு ஏஜென்சியான NSA ( National security Agency- NSA) எனப்படும் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியை வேவு பார்க்க கடந்த 2010 ஆம் ஆண்டு முறையான அனுமதியை அமெரிக்க நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானிஉ உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, எகிப்து நாட்டின் 2 முக்கிய அரசியல் கட்சிகள், லெபனான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு கட்சிகள் ஆகியவற்றையும் வேவு பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தகுந்த ஆதாரங்களுடன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை அமெரிக்காவில் இருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள எட்வர்ட் ஸ்னோடென் வழங்கியுள்ளதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், கனடாஅ, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த உளவு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் NSA   உலக வங்கி, சர்வதேச நிதியம்( ஐஎம்எப்), ஐரோப்பிய யூனியன், சர்வதேச அணுசக்தி முகமை போன்ற பன்னாட்டு அமைப்புகளையும் வேவு நடவடிக்கைக்கு தப்பவில்லை.

இந்த செய்தி வெளியானதில் இருந்து இந்தியா உள்பட அனைத்து 193 நாடுகளின் கோபப்பார்வையும் அமெரிக்கா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது,.

Leave a Reply