shadow

சிரியாவில் காட்டுமிராண்டித்தனமான ரசாயன தாக்குதல்கள்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா இருந்து வரும் நிலையில் நேற்றைய ரசாயன தாக்குதல் மூலம் பலர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நவெர்ட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவை கண்மூடித்தனமாக ரஷியா ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டில் ரசாயன தாக்குதலில் எண்ணற்ற மக்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள இந்த கொடூரமான தாக்குதலுக்கும் ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புமிக்க நாடுகளில் ஒன்றான ரஷியா, ரசாயன ஆயுதங்களை பொதுமக்கள்மீது பிரயோகிக்கும் சிரியாவை ஆதரிப்பதன் மூலம் ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 2118 என்ற எண் கொண்ட தீர்மானத்தையும் ரஷியா மீறிவிட்டது.

எனவே, கண்மூடித்தனமாக சிரியாவை ஆதரிக்கும் போக்கை ரஷியா உடனடியாக கைவிட வேண்டும். மேலும், இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனமான ரசாயன தாக்குதல்கள் இனியும் தொடராதவகையில் சர்வதேச சமுதாயத்துடன் ரஷியா இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply