அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா கன்னியாஸ்திரி ஒருவர் அத்துமீறி யுரேனியம் சேமிப்புக்கிடங்கில் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஒக்  ரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள யுரேனியம் சேமிப்பு கிடங்கில் கடந்த 2012ஆம் ஆண்டு 84 வயது கன்னியாஸ்திரி மேகன் ரீஸ் என்பவர் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினார். எனவே அவரும் அவருடன் வந்த இன்னொருவரும் கைது செய்யப்பட்டு இருவருக்கும் நேற்று அமெரிக்க நீதிமன்றம் சிறைதண்டனையை அறிவித்து தீர்ப்பு கூறியுள்ளது. இதில் மேகன் ரீஸுக்கு மூன்று ஆண்டுகளும், உடன் வந்தவருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை கேட்ட கன்னியாஸ்திரி மேகன் ரீஸ், இந்த தீர்ப்பு குறித்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், இந்த போராட்டத்தை நான் 70 வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

 

Leave a Reply