shadow

bangalore-thread-ceremony-photography-07

வைதீகத்தை மைய்யமாக வைத்துதான் உபநயன ஏற்பாடு செய்ய வேண்டும்,வைதீகத்தர்க்கு முக்யத்துவம் தரவேண்டம் என்றால் அதில் என்னவெல்லாம் அடங்கும் என்று சிலருக்கு மனதில் கேள்விகள் எழலாம்,அவைகள் இதோ,
1>ஜபம் செய்வதற்க்கு அவரவர் சக்திக்கு ஏற்றவாரு நல்ல எண்ணிக்கையில் ருத்ரவிக்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் .
2>வைதீக சாமான்கள் தரமானதாகவும் நல்லவையாகவும் இருத்தல் அவசியம்,
3>நாந்தீ போன்ற விஷயங்களில் ஏனோதானோ என இறாமல் முறையாக செய்ய வேண்டும்,
4>ப்ராயச்சித்தத்தை முறைப்படி கஞ்சத்தனம் பாராமல் செய்யனும்,
5>உபநயனம் ஆன பிறகு குறைந்தது 4நாட்களாவது விடாமல் சமிதாதானம் செயவதற்க்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்தல்,
6>வைதீக சம்பாவனை விஷயத்தில் கஞ்சத்தனம் பாராமல் தாராளமாக நடந்து கொள்ளனும்,
உபநயனத்தில் இடம் பெறும் ப்ரயோகங்கள் உபநயனத்தில் அங்கமாக வேதமந்திரத்துடன் கூடிய பல அம்சங்கள் ரிஷிகளால் விதிக்கப்பட்டுள்ளன ,அவைகளை பார்கலாம்.
1>விக்னேஷ்வரபூஜை,
2>புண்யாஹவாசனம்
3>ஸங்கல்பம்
4>உதகசாந்தி ஜபம்
5>ஷோபனநாந்தி
6>அங்குரார்பணம்(பாலிகை)
7>ப்ரதிஸ்ர பந்தம்(ரக்ஷ்க்ஷா பந்தனம்)
8>சௌளம்(3வது அல்லது 5வது வயதில் இது செய்யபட வேண்டும் ,ஆனால் தற்காலத்தில் இந்த சிகை வைத்து கொள்ளும் கர்மா உபநயனத்தன்று நடைபெருகிறது.
9>யக்ஞோபவீத தாரணம்(பூணூல் அனிவித்தல்)
10>குமார போஜனம்
11>ப்ரம்மசர்ய அடையாளங்கள்
12>அஸ்மாரோஹனம்
13>மௌஞ்ஜீ பந்தனம்
14>ஹஸ்த க்ரஹணம்
15>ப்ரதான உபநயன ஹோமம்
16>ப்ரம்மோபதேசம்
17>ஸமிதாதானம்
18>பந்துக்கள் ஆசீர்வாதம்
19>ப்ரணவ ஸ்ரத்தா மேதா பூஜை, ஹோமம்
20>ஹரி ஹர ஆச்சார்ய சம்பாவனை
21>அக்ஷ்க்ஷதை ஆசீர்வாதம்
22>ஹாரதி
23>மாத்யான்னிகம்#
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ப்ரயோகங்களும் மிக சிரத்தையாக நடைபெறவேண்டும்

Leave a Reply