shadow

 police and danceஉத்தரப் பிரதேசத்தில் போதையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை நடனமாட மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உபி காவல்துறை அந்த போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்தும் பிரச்சனை இன்னும் ஓயவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் ஹாஜகான்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கிராமத் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீஸ் காவலர் சைலேந்திர குமார் சுக்லா, கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடன நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த மேடைக்கு திடிரென சென்ற அவர்  நடனமாடிக் கொண்டிருந்த பெண் அருகே சென்று, அவரிடம் தகாத முறையில் நடந்ததோடு அவரைத் தொடர்ந்து நடனமாடக் கூறி, தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எடுத்து அந்தப் பெண்ணின் மீது வீசி நடனம் ஆடுமாறு கூறியுள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1sKMlrA” standard=”//www.youtube.com/v/SyKzyK0Hsys?fs=1″ vars=”ytid=SyKzyK0Hsys&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7391″ /]

நீண்ட நேரம் ஆடியதால் களைத்து போயிருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில், தொடர்ந்து ஆட முடியாமல் சோர்வுடன் மெதுவாக ஆடத் தொடங்கினார். அதனால் ஆத்திரமடைந்த அவர்  தனது கைத்துப்பாக்கியை எடுத்து, அந்த பெண்ணை நோக்கி துப்பாக்கியை காட்டி தொடர்ந்து வேகமாக ஆடுமாறு பயமுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த அனைவரும் அதிர்ந்து, அந்தப் பெண்ணை விட்டுவிடும்படி அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், யாரும் குறுக்கிடக் கூடாது என்று அவர் மிரட்டல் விடுத்ததால் அனைவரும் ஒதுங்கி நின்றனர். காவலரின் மிரட்டலால் அச்சம் அடைந்த பெண்ணும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடனமாடினார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்த நபர்களால் செல்ஃபோனில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வீடியோ பதிவு கடந்த 2 நாட்களாக தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் மிகப் பெரிய அளவில் பரவியது.

இந்த வீடியோ பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாஜகான்ப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட காவலரை இடைநீக்கம் செய்தும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மோசமான செயலில் ஈடுப்பட்ட காவலர் சைலேந்திர குமார் சுக்லா என்றும், சம்பவத்தின்போது அவர் மது அருந்தி இருந்ததும் பின்னர் தெரியவந்தது.

Leave a Reply