shadow

8 கோடி ரூபாய்க்கு சமோசா சாப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள்


samosaஒருகாலத்தில் அரசு பணத்தில் ஒரு நயாபைசா கூட செலவு செய்யாத நேர்மையான அமைச்சர்களும், அதிகாரிகளும் நாடு முழுவதும் இருந்தார்கள். ஆனால் தற்போது கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதோடு, டீ, காபி குடிப்பது கூட அரசு செலவில் அமைச்சர்கள் செய்து வருவது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மாநிலத்தின் வரவுசெலவு குறித்து சட்டமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அமைச்சர்களுக்கும், அவரை பார்க்க வந்த விருந்தினர்களுக்கு டீ, காபி, சம்சா, போன்ற திண்பண்டங்கள் வாங்கிய வகையில் மட்டும் ரூ.8 கோடி செலவாகியுள்ளதாம்.

அரசு செலவில் சம்சா சாப்பிட்ட அமைச்சர்களில் முதலிடத்தில் உள்ளவர் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அருண் குமார் கோரி என்பவர்தான். இவர் 22,93,800 ரூபாய் திண்பண்டங்களுக்காக செலவு செய்து முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முகமது ஆஸம் கான் 22,86,620 ரூபாய் செலவு செய்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கைலாஷ் சவுர்ஷியா 22,85,900 ரூபாய் செலவு செய்து இருக்கிறார் என்று அவையில் சொல்லி இருக்கிறார் அகிலேஷ்.

ஆனால் அதே நேரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சிவ்பால் யாதவ் ஒரு ரூபாய் கூட இந்த வகையில் செலவு செய்யவில்லையாம். இவர் அகிலேஷ் யாதவ்வின் மாமா என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply