shadow

மனநோய் மருத்துவமனையில் ராகுல்காந்தி அட்மிட்? உ.பியில் பரபரப்பு
rahul gandhi
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நாட்டிற்கு எதிராக கோஷமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் மாணவர் அமைப்பு தலைவர் கண்ணையா குமார் உட்பட 7 பேர் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று நாள் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல்காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில், உ.பி மாநில மருத்துவமனை ஒன்றில் மனநோயாளிகள் பிரிவில் ராகுல் காந்தி பெயரில் சிகிச்சைக்கான அனுமதி சீட்டையும் சில மாணவர்கள் இன்று வாங்கியுள்ளனர் இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம், அனுமதி சீட்டை எழுதித் தந்த மருத்துவமனை ஊழியரை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ரவிகாந்த் கூறியபோது, “மதம் மற்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகள் எல்லோர்க்கும் பொதுவான மருத்துவ சேவை அளிக்கும் தொழில்முறைக்கு எதிரானதாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, எங்கள் பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

Leave a Reply