உ.பி கவர்னர் ராம்நாயக் மற்றும் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி.
hospital
உத்தரப் பிரேதச மாநிலத்தின் கவர்னர் ராம் நாயக் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணிக்கு சன்ஜாய் காந்தி போஸ்ட் கிரஜூவேட் இன்ஸ்டிடியூட் அப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் மார்புச்சளி அதிகமானதால் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வது மக்களவை உறுப்பினராக இருந்த ராம் நாயக்  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி முதல் உ.பி கவர்னராக ராம் நாயக் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல் நலக் குறைவு காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *