shadow

ராகுல்காந்தியை பொடியன் என்று வர்ணித்த காங்கிரஸ் தலைவர் நீக்கம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தியை பப்பு என அழைத்த உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் உபி காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிப்பதற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் செல்ல முயன்ற போது அவர் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ராகுல் கைதை கண்டித்து மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய்பிரதான் எனப்வ்ர் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை பகிர்ந்தார். அதில், ராகுல் காந்தியின் முதல் கவனம் நாட்டு நலன் மீதான அக்கறைதான் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தியின் பெயருக்குப் பதிலாக, பப்பு எனக் கூறியிருந்தார்.

பப்பு என்ற இந்தி வார்த்தைக்கு, சிறு பையன், பொடியன் என அர்த்தமாகும். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன்பேரில், வினய் பிரதானுக்கு விளக்கம் கேட்டு, காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், அவர் அளித்த பதில் திருப்தி அளிக்காததை தொடர்ந்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்வதாக, காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply