shadow

தலைவர்களின் பிறந்த நாள் விடுமுறையில் 15 நாட்கள் கட்! உபி அரசு அதிரடி உத்தரவு

சமீபத்தில் பதவியேற்ற உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அம்மாநில மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார். அவருடைய அதிரடியால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல்வர் யோகி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

உ.பி. மாநிலத்தில் இதுவரை அரசு விடுமுறைப் பட்டியலில் 42 நாட்கள் இருந்தது. ஆனால் தற்போது இவற்றில் 15 விடுமுறை நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுவரை தலைவர்களின் பிறந்தநாள், இறந்தநாள் ஆகியவைகளுக்காக 17 நாட்கள் விடுமுறை என்று இருந்த நிலையில் அவற்றில் இருந்து 15 நாட்களை உபி அரசு நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியபோது, “அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தலைவர்கள் பிறந்தநாள் போன்றவற்றிற்காக அறிவிக்கப்பட விடுமுறை நாட்களில் 15 நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயக்கப்படும். எந்த தலைவருக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டதோ அவர் தொடர்பாக பாடம் புகட்டப்படும்” என்று கூறினார்.

முதல்வர் யோகியின் இந்த அறிவிப்பை அடுத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Reply