shadow

நடுவானில் வெடித்து சிதறிய ரஷ்யாவின் விண்கலம். பரபரப்பு தகவல்

1விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியில் இருந்து சுமார் 28000 கிமீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பொருட்கள் அவ்வப்போது விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் விண்வெளி வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய விண்கலம் ஒன்று ஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் இந்த விண்கலம் கிளம்பிய 383 நொடிகளில் வெடித்து சிதறி ரஷியாவின் துவா மலைப்பகுதி அருகே தரையில் விழுந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த 2.4 டன் எடைகொண்ட உணவு, எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் முற்றிலும் நாசமாகின.

Leave a Reply