shadow

நடுவானில் திடீரென கழன்று விழுந்த விமான எஞ்சின்: பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் உள்ள பயணிகள் விமானம் ஒன்றில் இருந்த எஞ்சின் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கழன்று கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஹவாய் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் உட்பட 373 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பெரிய சத்தம் கேட்டது. அப்போதுதான் விமான எஞ்சின்களில் ஒன்று கழன்று விழுந்தது தெரியவந்தது. இதனால் விமானம் தடுமாறியபடி பறந்ததால் பயணிகள் பதட்டமடைந்தனர்

அந்த விமானத்தில் மொத்தம் 4 எஞ்சின்கள் இருந்ததால் மீதம் இருக்கும் மூன்று என்ஜின்களை வைத்துக்கொண்டு விமானத்தை கண்டிப்பாக தரையிறக்க முடியும் என விமானிகள் பயணிகளிடம் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் அந்த விமானம் ஹவாயில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் ஹவாய் நகருக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply