shadow

விமான பயணத்தின்போது லெக்கின்ஸ் அணிய தடை. அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் லெக்கின்ஸ் உடை அணிந்து பயணம் செய்ய முயன்ற 2 இளம்பெண்களுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி சமுக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மின்னெ பொலீஸ் நகருக்கு செல்லவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் இரண்டு பெண்கள் இறுக்கமான லெக்கின்ஸ் உடை அணிந்து வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிர்வாகி, லெக்கின்ஸ் மேல் வேறு உடை மாற்றினால் பயணம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்றும் இல்லையெனில் பயணத்திற்கு அனுமதி கிடையாது என்றும் கூறினர். இதற்கு சம்மதம் தெரிவித்த ஒரு பெண் லெக்கின்ஸ் மேல் வேறு உடை அணிந்து பயணத்தை தொடர்ந்தார். ஆனால் மற்றொரு ​பெண்ணின் கையில் மாற்று உடை இல்லாததால் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் பயணம் மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வழக்கம் போல் ஒரு குரூப் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் ஏஜென்ட், ‘அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் செருப்பு இல்லாமல் வெறுங்கால்களுடனோ, அல்லது உரிய ஆடை அணியாமல் இருந்தாலோ பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும்

வழக்கமான பயணிகள் லெக்கின்ஸ், யோகா ஆடைகள் அணிந்து வர அனுமதி மறுக்கப்படுவதில்லை. மாறாக யுனைடெட் விமான நிறுவன ஊழியர்களின் பாஸ் பயன்படுத்தி பயணிப்பவர்கள் இதுபோன்ற ஆடைகள் அணியக் கூடாது என்பது விதி. ஆகையால் விமான ஊழியர்களின் பாஸ் பயன்படுத்தி பயணிக்கவிருந்த 2 பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிதத்துள்ளது.

Leave a Reply