shadow

4 நிமிட இடைவெளியில் மரணம் அடைந்த 71 ஆண்டுகால தம்பதி

71 ஆண்டுகாலம் இணைபிரியாமல் ஜோடியாக வாழ்ந்த தம்பதிகள் 4 நிமிட இடைவெளியில் மரணம் அடைந்த அதிசய சம்பவம் ஒன்று இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

93 வயது வில்ஃப் ரசல் மற்றும் 91 வயது அவரது மனைவி வேரா ஆகியோர்களுக்கு திருமணம் ஆகி இந்த ஆண்டுடன் 71 வருடங்கள் நிறைவு பெற்றது. சமீபத்தில் தங்களது 71வது திருமண திருமண நாளை கொண்டாடிய இந்த தம்பதியினர்கள் திடீரென உடல்நலம் இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டிமென்ஷியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட வில்ஃப் ரசல் தனது 71ஆண்டுகால மனைவியை கூட அடையாளம் காண முடியாத நிலைக்கு சென்றார். இதனால் வேதனை அடைந்த வேராவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை 6.50 மணியளவில் வில்ஃப் ரசல் காலமானார். அவர் மரணம் அடைந்து 4 நிமிடங்களில் அதாவது 6.54 மணியளவில் அவரது மனைவி வேராவும் காலமானார். தன்னுடைய கணவர் காலமானதை வேரா அறியாமலே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்விலும் சாவிலும் பிரியாத இந்த அதிசய ஜோடியை அப்பகுதி மக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Leave a Reply