shadow

england couple 1     உலக அதிசயங்களுள் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சுற்றுப்பயணம் வந்த இங்கிலாந்து காதல் ஜோடி ஒன்று ஆக்ராவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
British Couple death in India
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த காதலர்கள் ஜேம்ஸ், அலெக்ஸ் காஸ்கெல். ஆகிய இருவரும் லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் தேனிலவு கொண்டாட இந்தியா வந்துள்ளனர்.

British Couple death in India

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அன்று , ஆக்ராவில் உள்ள காதலின் சின்னமான தாஜ்மஹால் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை  எடுத்து தங்கியுள்ளனர். இரவு உணவை அறைக்கு வரவழைத்துள்ளனர். அதன் பிறகு இரண்டு நாட்களாக வெளியில் வராமல் இருந்துள்ளனர்.

england couple 4

சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகம் காவல்துறை உதவியுடன் இங்கிலாந்து தம்பதி தங்கி இருந்த அறையைத்  திறந்து  பார்த்தபோது, கட்டிலில் ஜேம்ஸ், அலெக்ஸ் காஸ்கெல் இருவரும் சடலமாகக்  கிடந்துள்ளனர். இவர்கள் அருகே போதை மாத்திரை அட்டைகள், மது பாட்டில்கள் நிறைய கிடந்துள்ளன.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

england couple

england couple 5

Leave a Reply