shadow

18-darkcircle

த ஹார்ன்பி எஜுகேஷனல் டிரஸ்ட், பிரிட்டனில், ஆங்கில மொழி கற்பித்தல் தொடர்பான ஒரு பாடத்தில், ஓராண்டு முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகையை வழங்குகிறது.

தெற்காசிய பிராந்திய அடிப்படையில், இதைப் பெறுவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

The A.S.Hornby Educational Trust என்பது, பிரிட்டனில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை. கடந்த 1961ம் ஆண்டு இது ஏற்படுத்தப்பட்டது. ஆங்கில மொழி, ஒரு வெளிநாட்டு மொழியாக, உலகம் முழுவதும் கற்றுக்கொடுக்கப்படுவதை ஊக்குவிப்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

இந்த உதவித்தொகையைப் பெற விரும்புபவர், பிரிட்டனின் இளநிலைப் பட்டப்படிப்புக்கு சமமாக மதிக்கப்படக்கூடிய வகையிலான ஒரு இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதுதவிர, வேறுபல தகுதி நிலைகளும் உள்ளன.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் – ஜனவரி 30.

இதர அனைத்து விபரங்களையும் அறிய //www.britishcouncil.in/study-uk/scholarships/charles-wallace-trust/hornby.

Leave a Reply