வேதாளம்-தூங்காவனம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வசூல் விபரம்
collection
கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜீத்தின் ‘வேதாளம்’, மற்றும் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வசூல் விபரங்கள் தற்போது விநியோகிஸ்தர்களிடம் இருந்து வந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அதாவது நவம்பர் 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து நாட்டில் வேதாளம் திரைப்படம் ரூ.55.30 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும், தூங்காவனம் ரூ.10.66 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இதே நாட்களில் அமெரிக்காவில் ‘வேதாளம்’ ரூ.1.13 கோடியும், தூங்காவனம் ரூ.1.53 கோடியும் வசூல் செய்துள்ளது. நமது நமது அண்டை மாநிலமான கேரளாவில் நவம்பர் 10 முதல் 13 வரையிலான நான்கு நாட்களில் ‘வேதாளம்’ ரூ.3.45 கோடியும், தூங்காவனம் ரூ.1.55 கோடியும் வசூல் செய்துள்ளது.

அமெரிக்காவில் தூங்காவனம் அதிகமாகவும், இங்கிலாந்தில் ‘வேதாளம்’ அதிகமாகவும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *