அதிமுகவுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கட்சிகளே காரணம் என்று கூறி நேற்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, அதிமுகவில் உழைப்பால் உயர்ந்தவர்கள் பெரிய பதவியை கூட அடைய முடியும் என்றும், ஆனால் திமுக என்பது ஒரு கட்சி அல்ல, கம்பெனி என்றும், அக்கட்சியில் வாரிசுகள் மட்டுமே தலைமை பொறுப்பிற்கு வரமுடியும் என்றும் ஆவேசமாக பேசினார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் இன்று மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது:

வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே! சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *