உதயநிதியின் முக்கிய அறிவிப்பு! ஜனவரி 24ல் என்ன செய்ய போகிறார்?

கடந்த சில நாட்களாக குடியுரிமை சட்டத்தின் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவிர அரசியல் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக சமீபத்தில் அவர் பதிவு செய்த ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் வரும் ஜனவரி 24ம் தேதி தான் நடித்த சைக்கோ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக உதயநிதி அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் பணியில் பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது நடிப்பு தொழிலையும் கவனித்து வருகிறார்

மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ மற்றும் ஏஞ்சல், மகிழ்திருமேனி படம் என பிஸியாக இருந்த உதயநிதி தற்போது சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ஜனவரி 24ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் நித்யாமேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் தன்விர்மிர் ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply