உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மாபெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி தற்போது ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிரார். நேற்று இந்த படத்தின் டீஸர் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நயன் தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை அடுத்து ‘நண்பேண்டா’ என்ற படத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெகதீஷ் என்ற இயக்குனர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த படத்தின் நாயகியாக நடிக்க நஸ்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இயக்குனர் ஜெகதீஷ் கூறியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் நண்பேண்டா படத்தில் சந்தானம் காமெடியனாக மட்டுமின்றி மிக முக்கியவேடத்தில் நடிக்கிறார் என்று ஜெகதீஷ் மேலும் கூறினார்.
இதனிடையே ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் டீஸர் இணையதளங்களில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply