shadow

THSHK_UDAYAKUMAR12_1554293f copyசமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, மத்திய அரசின் உளவுப் பிரிவு,  ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில்”வெளிநாட்டு நிதி உதவி பெறும் சில தொண்டு நிறுவனங்கள், இந்திய வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

வெளிநாட்டு நிதியின் உதவியால் இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களை முடக்கசதி செய்து வருவதாகவும். இதில் கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் முக்கியமான ஒருவர் என்றும் மத்திய உளவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை ரகசியமாக வெளிநாட்டினர் வந்து சந்தித்து சென்ற தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள்து. தற்போது உளவுத்துறையும் அதை உறுதிப்படுத்தியிருப்பதால், உதயகுமார் வட்டாரம் கடும் நடுக்கத்தில் உள்ளது. அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் உதயகுமார் தனது வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply