shadow

நிபா வைரஸ் எதிரொலி: கேரள பழங்களுக்கு தடை விதித்த அரபு நாடு

கேரளாவில் நிபா என்ற வைரஸ் தாக்கி பலர் உயிரிழந்து வரும் நிலையில் அங்கிருந்து இறக்குமதியாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது

கடந்த பல ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் இருந்து ஐக்கிய அரபு நாட்டுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென நேற்று கேரள பழங்கள், காய்கறிகளுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியதாவது: இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து விதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அபுதாபி உணவு கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் துபாய், சார்ஜா உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply