shadow

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 69 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டி பந்தாடிய இந்தியா

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய பாகிஸ்தானை இந்திய பந்துவீச்சாளர்கள் 69 ரன்களில் சுருட்டி சாதனை செய்தனர். இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply