19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அதிரடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதி போட்டியில் அந்த அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இறுதிப்போட்டி வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி நடைபெறும்.

நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் ஃபார்ட்டியூன் 74 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி படுசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை கனவு கலைந்தது.

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் தென்னாப்பிரிக்க நாளை மறுநாள் மோதுகிறது. அந்த போட்டியில் வெல்லும் அணி உலகக்கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும்.

Leave a Reply