shadow

நேதாஜியின் விமான விபத்திற்கு முந்தைய நாள் நடந்தது என்ன? இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்ட திடுக்கிடும் செய்தி

nethajiஇந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் அவர் செய்த பயணங்கள் குறித்த ஆவணங்களை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி நேதாஜி ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவருக்கு நேரடி விமானம்  கிடைக்கவில்லை என்றும் கூறிப்பட்டுள்ளது. இதனால் தைவான் வழியாக ஜப்பான் செல்லும் விமானத்தில் நேதாஜி பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.  அந்த விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டுமே இருந்தாதால், நேதாஜி மட்டும் அந்த விமானத்தில் சென்றதாகவும், அவருடைய ஆலோசகர்கள் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை என்றும் அந்த  இணைய தளம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருந்ததால் விமானம் புறப்பட தாமதமானதாகவும் திட்டமிட்டப்படி தைவானுக்கு செல்லாமல் விமானத்தை வியட்நாமில் உள்ள டூரன் நகரில் விமானி தரை இறக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு டூரன் நகரில் நேதாஜி தங்கிவிட்டு மறுநாள் அதாவது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தைவானுக்கு விமானத்தில் சென்றபோதுதான் விபத்து நடந்ததாகவும், அந்த விபத்தில் நேதாஜி மரணம் அடைந்ததாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Chennai Today News: U.K. website releases papers of day before Bose plane crash

Leave a Reply