shadow

பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி முறிந்தது. மத்திய அமைச்சர்கள் இன்று ராஜினாமா

கடந்த 2016 பொதுத்தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியில் அமர்ந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜகவுடனான கூட்டணியை நேற்று முறித்து கொண்டது. இதனையடுத்து தெலுங்கு தேச மத்திய மந்திரிகள் இன்று ராஜினாமா செய்யவுள்ளனர்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால் மத்திய பா.ஜ.க. மீது அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி இதன் காரணமாகவே தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேச கட்சி எம்பிக்களான அசோக் கஜபதி ராஜூ, ஓய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த கூட்டணி முறிவு குறித்து ஆந்திரமுதல்வர் ‘சந்திரபாபு நாயுடு கூறியபோது, ‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏர்கவில்லை. ஆந்திராவின் கோரிக்கைகள் குறித்து பிரதமரை தொடா்பு கொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை. நிதியமைச்சா் அருண் ஜெட்லியும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே ஆந்திர மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு தெலுங்கு தேச கட்சியை சோ்ந்த மத்திய அமைச்சா்கள் 2 பேரும் பதவி விலகவுள்ளனர். இவ்வாறு ஆந்திரமுதல்வர் ‘சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்

Leave a Reply