shadow

மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த இரண்டு பாகங்கள் இருக்குமிடம் கிடைத்ததாக ஆஸ்திரேலி பிரதமர் இன்று காலை அறிவித்துள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு.

australia flight copyஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் மாயமான மலேசிய விமானத்தின் இரண்டு துண்டுகள் இருப்பதாக ஆஸ்திரேலிய சாட்டிலைட் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்து உடனடியாக உண்மையை அறியும்படி ஆஸ்திரேலிய கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இன்று காலை ஆஸ்திரேலிய பிரதமர் Tony Abbott செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவரது அறிக்கை வெளியானவுடன் விமானத்தை தேடிக்கொண்டிருக்கும் 26 நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய சாட்டிலைட் புகைப்படைத்தை வைத்து பார்க்கும்போது மாயமான மர்ம விமானம் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிக்கும் இந்திய பெருங்கடல் பகுதிக்கும் இடையில் இருக்கும் அரிசோனா அருகே இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2300 கி.மீ தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மலேசிய போக்குவரத்து அமைச்சர் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியபோது “மலேசிய விமானம் குறித்த டேட்டாக்கள் அனைத்து நாடுகளில் இருந்தும் வந்து கொண்டிருப்பதாகவும், அனைத்து டேட்டாக்களையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply