shadow

இரண்டு படத்தில் 6 நாயகிகள். விஜய் காட்டில் மழை

இளையதளபதி விஜய் தற்போது ‘விஜய் 61’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 62’ படத்திலும் அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘விஜய் 62’ படத்தில் ராகுல் ப்ரித்திசிங், டாப்சி மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் முதன்முதலாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே ‘விஜய் 61’ மற்றும் ‘விஜய் 62’ ஆகிய படங்களில் ஆறு நாயகிகள் அதுவும் அனைவருமே முன்னணி நாயகிகள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply