அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில நாடுகள் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்து வந்த நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாள நாட்டிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்து வருகிறது

நேபாளத்தில் ஏற்கனவே 243 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேபாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது

காத்மண்ட்பகுதியில் ஒருவரும் கபில்வஸ்து பகுதியில் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. நேபாள நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்நாட்டினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *