shadow

சசிகலா புஷ்பா மீது பழிவாங்கும் படலம் ஆரம்பமா? அடுக்கடுக்காக குவியும் பாலியல் புகார்கள்

sasikala1திமுக எம்பி திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா அடித்ததால், திமுகவினர்தான் சசிகலாவிற்கு பல டார்ச்சர்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக திமுகவினர் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுக தலைமை அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

தற்போது அதிமுக தலைமையால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீனும் எடுத்து சசிகலா பாதுகாப்பாக இருந்தாலும் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்காக பல புகார்கள் குறிப்பாக பாலியல் புகாரும் கொடுக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா வீட்டில் வீட்டுவேலை செய்த பானுமதி, ஜான்சிராணி சகோதரிகள் சசிகலா மீதும் அவரது கணவர், மகன் மீதும் கடுமையான புகார்களை மனுவாக கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திசையன்விளை ஆணைகுடி ஊரைச் சேர்ந்த நானும் எனது அக்காள் ஜான்சிராணியும் கடந்த 2011-ம் வருஷம் சென்னையில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டு வேலைக்குப் போனோம். பின்னர் தூத்துக்குடி மேயர் ஆனவுடன் அவர், எங்களை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றார். அவர் கூப்பிட்டவுடன் உடனே போய் நிற்கவில்லை என்றால் அசிங்கமா திட்டி அடிப்பார்.

சில சமயம் சசிகலாபுஷ்பா மசாஜ் பண்ணிவிட சொல்லுவார். மசாஜ் சரியாக பண்ணவில்லை என்றால் அசிங்கமாக பேசி காலால் எட்டி மிதிப்பார். அதே போல் அவரது கணவரும் மசாஜ் பண்ண சொல்லி கொடுமைப்படுத்துவார். சசிகலாபுஷ்பாவின் மகன் பிரதீப் செக்ஸ்டார்ச்சர் கொடுத்தான். 2015-ம் வருஷம் சசிகலாபுஷ்பாவின் அம்மா கெளரி சென்னைக்கு வீட்டிற்கு வந்தார். அந்த சமயம் நான் விட்டைவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தேன். அவங்க அம்மா கெளரி உட்பட பலரும் சேர்ந்து என்னை அடித்து மிதித்தார்கள். சசிகலாபுஷ்பா, எம்.பி என்கிற அதிகாரத்தோடு இருந்ததால் உயிருக்கு பயந்து இதை யாரிடமும் நாங்கள் சொல்லவில்லை. அவர் சம்மந்தமாக பல புகார்கள் சொல்லப்பட்டு வருவதால் நானும் புகார் கொடுக்கிறேன்’ இவ்வாறு அவர்கள் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சசிகலா புஷ்பாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியபோது, “பெரிய இடத்தை பகைத்தால் என்ன ஆகும் என்கிறதுக்கு இது உதாரணம். ஏற்கெனவே தன்னை டார்ச்சர் செய்து விரட்டினார்கள் என்று சொல்ற அந்தப் பெண், அதற்குப் பிறகு அதே வீட்டிற்கு தன்னுடைய அக்காள் வேலைக்கு சேர்ந்தாள் என்று சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா? எப்படியும் கதற வைக்க வேண்டும் என்பதற்காக பல கோணங்களில் மாவட்டம் தோறும் பலர் இப்படி புகாரோடு கிளம்பியிருக்கிறாங்க. நிச்சயமாக இது பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை எதிர்பார்த்துதான் கோர்ட்ல முன் ஜாமீன் வாங்கினாங்க. கொலை மிரட்டல் தனக்கு வர்றதா சொன்னதால் தானே டெல்லியில கூடுதல் பாதுகாப்பு தர சொல்லியிருக்காங்க என்று கவலையுடன் கூறினார்.

Leave a Reply