நன்றி தலைவா! ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் இந்தியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று பதிவு செய்த கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு ஏகப்பட்ட புகார் வந்ததால், டுவிட்டர் இந்தியா அந்த வீடியோவை அதிரடியாக நீக்கியது. அதன்பின்னர் இன்று மாலை டுவிட்டரில் ரஜினிகாந்த் இதுகுறித்து விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்திற்கு டுவிட்டர் இந்தியா நன்றி தெரிவித்ததுடன் ரஜினியை அனைவரையும் போல ‘தலைவா’ என்று அழைத்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் இந்தியா கூறியிருப்பதாவது: COVID-19 குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா.

டுவிட்டர் இந்தியாவின் இந்த டுவிட்டுக்கு ரஜினி ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply