டுவிட்டரிலேயே டிரெண்டான அதிசயம்

கொரோனா தடுப்பு நிதியாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி செய்த டிவிட்டர் சிஇஓ குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று திடீரென டுவிட்டர் இணையதளம் சில மணிநேரங்கள் உலகம் முழுவதும் தடைபட்டதால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

உலகின் பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவும் இருப்பதை அறிந்து அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர் இதனை அடுத்து அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது டுவிட்டர் இணையதளம் தான்

டுவிட்டரில் தான் அவ்வப்போது கொரோனா செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் திடீரென ஆஸ்திரேலியா பிரேசில் ஜெர்மனி இந்தியா உட்பட பல நாடுகளில் சில மணி நேரங்கள் டுவிட்டர் இணையதளம் முடங்கியது. இதனால் டிவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர்

இதனை அடுத்து டுவிட்டர் டவுன் என்ற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

டுவிட்டர், டுவிட்டர் டவுன், கொரோனா, செய்திகள்,

Leave a Reply