shadow

shadow

துருக்கியில் நேற்று முன் தினம் நடந்த சுரங்க விபத்தில் 274 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துருக்கி பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பயங்கர வன்முறை நிகழ்ந்ததாகவும், வன்முறையை கட்டுப்படுத்த தடியடி, கண்ணீர்ப்புகை வீசப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் உள்ள சோமா என்ற இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் நேற்று முன் தினம், மின்சார கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு சுரங்கத்தில் வெளியானதால், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சுமார் 787 ஊழியர்களில் சுமார் 400 ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் 274 பேர்வரை இதுவரை மரணம் அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி பிரதமர் மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ளார். துருக்கி எரிசக்தி துறை அமைச்சர் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு, மீட்பு நடவடிக்கைகளை உடனிருந்து இரவு பகலாக கவனித்து வருகிறார்.

போப்பாண்டவர் இன்று தந்து டுவிட்டரில் பலியான சுரங்க ஊழியர்களுக்காக தாம் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

துருக்கியில் வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மீட்பு நடவடிக்கைகளும் துரிதமாக செயல்பட்டு வருகிறது என்று அரசு செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1mZX549″ standard=”//www.youtube.com/v/-JkjNA7psAk?fs=1″ vars=”ytid=-JkjNA7psAk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2398″ /]

Leave a Reply