சசிகலாவை சந்தித்த தினகரன்: அரசியல் திருப்பம் ஏற்படுமா?

தினகரன் மற்றும் திவாகரன் மோதலுக்கு பின்னர் நேற்று சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க நேற்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி மற்றும் நடராஜனின் சகோதரர் ஆகியோர் பெங்களூரு சென்றனர்

நேற்று மதியம் 12.30 மணிக்கு சிறைக்குள் சென்ற இவர்கள் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் அவர்கள் சசிகலாவுடன் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அவர்களின் குடும்ப விஷயங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக திவாகரன் விஷயம் குறித்து அவர்கள் அதிக நேரம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டி.டி.வி.தினகரன் உள்பட அனைவரும் மதியம் 2.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, நிருபர்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேட்டி காண முயன்றனர். ஆனால், அவர் பேட்டி கொடுக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *