shadow

அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சசிகலா அதிரடியால் தொண்டர்கள் அதிர்ச்சி

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக குடும்ப கட்சி என்ற முத்திரையை குத்தாமல் பாதுகாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவை கைப்பற்ற நினைத்த அவரது மனைவி ஜானகிக்கு தோல்வியே கிடைத்தது. அதேபோல் ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது அண்ணன் மகள் தீபா எடுத்த முயற்சிகளும் பெரிதாக வரவேற்கப்படவில்லை

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற்ற சசிகலா, தற்போது தண்டனை பெற்று சிறைக்கு செல்லவிருக்கும் நிலையில் கட்சியை தனது சகோதரி மகன் டிடிவி தினகரனிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு செல்கிறார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரனை கட்சியில் இன்று இணைத்து கொண்ட சசிகலா, அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை அளித்துள்ளார்.

பொதுசெயலாளர் சிறையில் இருக்கும் நான்கு வருடங்களுக்கும் துணைப்பொதுச்செயலாளர் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கும் வகையில் சசிகலா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எம்.ஜிஆர் மற்றும் அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply