பொங்கல் தினத்தில் சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் சென்சார் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருசில மணி நேரத்தில் சென்சார் குறித்த தகவல் வெளிவரும்

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 36’ திரைப்படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பொங்கல் தினத்தில் இருந்து ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொங்கல் தினத்தில் சூர்யா நடித்த ஒரு படம் வெளியாகவுள்ளது, இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் சூர்யாவின் ரசிகர்களுக்கு அன்றே இரண்டு விருந்துகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *