shadow

சூர்யா பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடும் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சூர்யாவின் பிறந்த நாளில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அன்றைய தினம் சூர்யாவின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடும் வகையில் இன்னொரு ஆச்சரிய செய்தி காத்திருப்பதாகவும், அந்த செய்தி என்னவென்று தெரிந்து கொள்ள ஜூலை 23 வரை காத்திருக்கவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இம்மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

 

Leave a Reply