shadow

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரஷ்ய வக்கீலை டிரம்ப் மகன் சந்தித்தது ஏன்? பெரும் பரபரப்ப்பு

அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு ரஷ்யா மறைமுக உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேர்தலில் போது டிரம்ப்பின் மகன், ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை டிரம்ப் மகன் ஜான், அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கை சேதப்படுத்தும் விதமாக தகவல்களை வெளியிடுவதாக ரஷிய வக்கீல் நடாலியா என்பவர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து அவரை ஜான் டிரம்ப் சந்தித்துள்ளார். அப்போது டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பால் மனாபோர்ட், டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ரஷிய வக்கீலை நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் கடந்த ஆண்டு ஜூன் 6-ந் தேதி சந்தித்ததை ஜான் டிரம்ப் ஒப்புக் கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு எதுவும் இல்லை என்று ஜனாதிபதி டிரம்ப் மறுத்து வரும் நிலையில் டிரம்பின் மகன் ரஷிய வக்கீலை சந்தித்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply