shadow

டிரம்ப் அதிரடியால் அதிர்ச்சியான மெக்சிகோ அதிபர்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் ஆரம்பம் முதலே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை, இந்தியா, சீனா நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவைகளில் அவர் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மெக்சிகோ நாட்டின் எல்லையில் சுவர் எழுப்ப உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சுவர் பிரச்சனை குறித்து அவர் அதிபர் ஆவதற்கு முன்பே பேசியிருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் சுவர் எழுப்பும் முடிவை டிரம்ப் எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் மெக்சிகோ அதிபர் அதிர்ச்சி அடைந்தது மடுட்மின்றி அமெரிக்காவில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து மெக்ஸிகோ அதிபர் பெனா நீயடோ மேலும் கூறியபோது, “அமெரிக்கா எழுப்பும் தடுப்புச் சுவரில் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லையில் சுவர் எழுப்புவதற்கு நாங்கள் பணம் அளிக்க மாட்டோம். அமெரிக்காவில் வசிக்கும் மெக்ஸிகோ மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுவர் எழுப்பும் அமெரிக்காவின் முடிவை நிராகரிகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply