shadow

தென் அமெரிக்கா பயணத்தை திடீரென ரத்து செய்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தனது பயணத்திட்டத்தை திடீரென ரத்து செய்துவிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட இருப்பதால் அந்த பணிகளை மேற்பார்வையிட்டு முடுக்கிவிடும் வகையில் டிரம்ப் தனது தென் அமெரிக்கா பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும், எனினும் அவருக்கு பதிலாக துணை அதிபர் மைக் பென்ஸ் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அரசுப் படைகள் கடந்த வாரம் ரசாயன தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply