shadow

டிரம்ப்-கிம் சிங்கப்பூர் சந்திப்பு எப்போது?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகியோரக்ள் சிங்கப்பூரில் சந்தித்து பேசுவது மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு வரும் 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது வடகொரியாவில் அணு ஆயுதங்களை குறைக்க வழிசெய்யும் ஆலோசனைகளை அமெரிக்கா வழங்கும் என்றும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை விலக்கும் வகையில் கிம் பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் மூன்றாம் உலகப்போர் தவிர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன

Leave a Reply