shadow

troiபாரபட்சமற்ற செய்திகள் மக்களை சென்றடைய வேண்டுமெனில் அரசியல் கட்சிகள், மதச் சார்பு அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சகங்ள் ஆகியவைகளுக்கு ஊடக நிறுவனங்கள் நடத்த அனுமதி மறுக்க வேண்டும் என மத்திய அரசை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வலியுறுத்தியுள்ளது. இதனால் ஊடகங்களை நடத்தி வரும் ஒருசில அரசியல் கட்சிகள் கதிகலங்கியுள்ளது.

நேற்று புதுடில்லியில் டிராய் தலைவர் ராகுல் குல்லார் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

ரேடியோ, டிவி மற்றும் பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், அரசு நிதிபெறும் நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கவேண்டும். அதுமட்டுமின்றி இந்த அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்களும் ஊடகங்கள் நடத்த தடை விதிக்கவேண்டும். ஏற்கனவே இதுபோன்ற அமைப்புகள் நடத்தும் ஊடகங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பொதுமக்களுக்கு பாரபட்சமான செய்திகள் சென்றடையும்.

பத்திரிகை மற்றும் ஊடகங்கள் நடத்தி வரும் தனியார் ஊடக நிறுவனத்தில் உரிமையாளரின் பங்குத்தொகை அதிகபட்சமாக 32 சதவீதமாக இருக்க சட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.

பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களை கண்காணிக்க தனியாக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு நிறுவ வேண்டும். இதற்கென தனிச் சட்டத்தை இயற்றி, அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும்

பொய்யான செய்திகளை வெளியிட்டால், சம்பந்தப்பட்ட செய்தியை அளித்த நபர் மற்றும் ஊடக நிறுவனத்தை தண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் கூடிய அதிகாரங்களை இந்த ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இதன் இடம்பெறும் உறுப்பினர்கள் ஊடகத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்களாக இருக்க வேண்டும்

வியாபார நோக்கில் பெரு வணிக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனங்களை வரைமுறைப்படுத்தவேண்டும். இவ்வாறு  ராகுல் குல்லார் கூறினார்.

Leave a Reply