shadow

shadow

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது.

travancore_dynastyஇக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

Sri Padmanabhaswamy temple
வரலாறு:
இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” பிரதிஷ்டை செய்யப்பட்டது

ராஜாவின் தானப் பட்டயம்:
1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் “பத்மநாபதாசர்” என்று அழைக்கப்பட்டனர்.[1] இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.
Sri Padmanabhaswamy Temple Mahavishnu Idol - 32 KG
தல வரலாறு :
வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு’ எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “”பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், “இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் “உண்ணிக் கண்ணனாக’ இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பத்மநாப சுவாமி’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

padmanabhaswamy-temple
இதிகாச புராணம் :
ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஹிந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.

வேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.

அதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்படுகிறது.

தரிசனம்:
தரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.

20131104152015_78_1
திருவிழாக்கள்
இந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா ஒக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்குஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.

ஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.

இந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெறும்.

Leave a Reply