shadow

த்ரிஷாவின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதா?

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான ‘பீட்டா’வில் நடிகை த்ரிஷா முக்கிய அங்கத்தினராக உள்ளார். பொதுவாக இவர் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கும் உதவும் குணம் படைத்தவர். பிராணிகளுக்கு என்று தனி பாதுகாப்பு இல்லம் அமைக்கும் பணியிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதைப் பார்த்த பீட்டா அமைப்பு இவரை விலங்குகள் நல வாரியத்தின் முக்கிய உறுப்பினராக்கியது. பெரும்பாலான முக்கிய நடிகர், நடிகைகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்காதது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பீட்டா அமைப்பின் உறுப்பினராக த்ரிஷா இருப்பதால் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த த்ரிஷா, ”நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. தற்போது நான் என் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். பெண்களை அவமரியாதை செய்வதுதான் தமிழர்களின் கலாச்சாரமா,தமிழ் கலாச்சாரம் பற்றி பேச வெட்கபடவேண்டும்”
என்று கூறியிருந்தார். நடிகர் கமல்ஹாசனும் தனது டுவிட்டரில், ”கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு, யாரோ ஒருவர் அவருக்கு பதில் பதிவுகளை இட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply